சாங்சொ, ஜூலை 26 (பெர்னாமா) -- சீன பொது பூப்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு நாட்டின் ஆடவர் இரட்டையரான ஏரோன் சியா - சோ வூய் யிக் ஜோடி தேர்வாகியது.
காலிறுதி ஆட்டத்தில், தமது சகாக்களான மான் வெய் சோங் - தீ கை வுனுடன் ஏரோன் சியா - சோ வூய் யிக் விளையாடினர்.
இவ்வாட்டத்தில், 21-16, 21-16 என்ற நேரடி செட்களில், பாரிஸ் மற்றும் தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலம் வென்ற ஏரோன் - வூய் யிக் வெற்றி பெற்றனர்.
இந்த ஆட்டம் 33 நிமிடங்கள் வரை நீடித்தது.
முன்னதாக வெய் சோங் - கை வுனுடன் நடைபெற்ற தொடர்ச்சியான இரு ஆட்டங்களில், ஏரோன் சியா - சோ வூய் யிக் ஜோடி வெற்றி பெற்றுள்ளது.
நாளை நடைபெறவிருக்கும் இறுதி ஆட்டத்தில், ஏரோன் - வூய் யிக் இந்தியாவுடன் மோதவுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)