மூவார், 27 ஜூலை (பெர்னாமா) -- தேசிய மாத கொண்டாட்டத்தை துவக்கி வைக்கும் வகையில், ஜோகூர் மூவார், தஞ்சோங் எமாஸ் சதுக்கத்தில், இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்ட Blizzwalk & Fun Run எனும் மெது ஓட்டத்தில் சுமார் 4,000- க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.
உள்ளூர் மக்களின் இந்த அமோக வரவேற்பு, நாட்டின் மீதான தேசப்பற்றை பிரதிபலிப்பதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
இன்று காலை நிலவரப்படி, 4,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இந்த மெது ஓட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இது 6.8 கிலோமீட்டர் தூரம். இந்த நிகழ்வை நாங்கள் மூவாரில் நடத்தும் வேளையில், இது ஒரு நேர்மறையான அறிகுறியாகும். வரவேற்பும் மிகவும் உற்சாகத்தை அளிக்கும் வகையில் உள்ளது.
ஓட்டப்பந்தயத்தை தவிர, நேற்று தொடங்கி அங்கு இசை நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
தேசிய மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில், மக்கள் கூட்டம் நிரம்பியிருக்கும் வேளையில், அவர்களின் தேச உணர்வு, இன்னும் அதிகமாவதாக ஃபஹ்மி தெரிவித்தார்.
ஜலூர் ஜெமிலாங்கை பறக்கவிடுவது உட்பட இன்னும் பல்வேறு நிகழ்ச்சிகள் வழி, மக்கள் தங்களின் தேசப்பற்றை வெளிப்படுத்தவும் அவர் அழைப்பு விடுத்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)