Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் அதிபர் மருத்துவமனையில் அனுமதி

24/08/2025 06:53 PM

கொழும்பு, ஆகஸ்ட் 24 (பெர்னாமா) -- அண்மையில் கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயர் இரத்தை அழுத்தம் காரணமாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

சிறையிலிலிருந்தபோது அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

சிகிச்சை அளிக்க சிறையில் போதிய வசதிகள் இல்லை என்பதால் அவர் கொழும்புவில் உள்ள மருத்துவமனைக்குக் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அரசாங்க நிதிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக விக்ரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

பதவியின் போது, தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணத்திற்காக அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரை, ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)