Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

செப்டம்பரில் சாரா மரண விசாரணை; சபா மரண விசாரணை நீதிமன்றம் திட்டவட்டம்

28/08/2025 05:05 PM

கோத்தா கினாபாலு, 28 ஆகஸ்ட் (பெர்னாமா) -- முதலாம் படிவ மாணவி சாரா கைரினா மகாதீரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணை திட்டமிட்டபடி செப்டம்பரில் நடைபெறும் என்று சபா மரண விசாரணை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

இருப்பினும், செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ள அவ்விசாரணை, அஸ்ரினா அசிஸ்க்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ள புதிய மரண விசாரணை அதிகாரியான செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அமிர் ஷா அமிர் ஹசான் முன்னிலையில் விசாரிக்கப்படும்.

இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது சபா மாநில நீதிமன்றத்தின் இயக்குநராகவும் பணியாற்றும் அஸ்ரினா அந்த மாற்றத்தை அறிவித்தார்.

வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பெயர்கள் அவருக்குத் தெரியாத போதிலும், சாரா கைரினா படித்த பள்ளி அமைந்துள்ள பாப்பார் பகுதியில் வசிப்பதால் இவ்வழக்கை விசாரிப்பதில் இருந்து தாம் விலகியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விசாரணை தேதிகள் செப்டம்பர் 3 முதல் 4 வரை, செப்டம்பர் 8 முதல் 12 வரை, செப்டம்பர் 17 முதல் 19 வரை மற்றும் செப்டம்பர் 22 முதல் 30 வரை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]