Ad Banner
Ad Banner
 உலகம்

பாகிஸ்தான்: பெட்ரோல் விலை 80 ரூபாய் குறைப்பு 

04/04/2026 05:29 PM

பாகிஸ்தான், 04 ஏப்ரல் (பெர்னாமா) -- பாகிஸ்தானில்  ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 80 ரூபாய் குறைத்து, 378 ரூபாயாக விற்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் அறிவித்துள்ளார். 

நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் பெட்ரோலிய வரியிலிருந்து இந்த குறைப்பு செய்யப்படுவதாக, நேற்றைய தொலைக்காட்சி நேர்காணலில் ஷெபாஸ் ஷரீஃப் கூறினார்.  

"பெட்ரோல் மீதான வரியை லீட்டருக்கு 80 ரூபாய் குறைப்பதாக நான் அறிவிக்கின்றேன். எனவே, ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 458 ரூபாயிலிருந்து 378 ரூபாயாக குறைக்கப்படும். இன்று நள்ளிரவு 12 மணி தொடங்கி பெட்ரோல் நிலையங்களில் அது அமலுக்கு வரும். இந்த குறைப்பு குறைந்தபட்சம் அடுத்த ஒரு மாதத்திற்கு அமலில் இருக்கும். அதோடு, இந்த குறைப்பு பாகிஸ்தான் முழுவதும் நடைமுறையில் இருக்கும்," என்றார் அவர். 

புதிய விலை மாற்றம் இன்று நள்ளிரவு அமலுக்கு வரும் என்றும், பாகிஸ்தான் முழுவதும் அது குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு நடைமுறையில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.  

மத்திய கிழக்கில் நிலவும் மோதலை தொடர்ந்து உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்வதைக் காரணம் காட்டி, அரசாங்கம் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகளை உயர்த்திய ஒரு நாள் கழித்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஷெபாஸ்கூறினார்.

மேற்காசிய போர் முடிவுக்கு வந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை போருக்கு முந்தைய நிலையை நாட்டில் எட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]