Ad Banner
Ad Banner
 பொது

ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாகக் கடந்து மலேசியாவை நோக்கிப் பயணிக்கும் நாட்டின் கப்பல்

10/04/2026 05:26 PM

கோலாலம்பூர், 10 ஏப்ரல் (பெர்னாமா) -- முன்னதாக ஹோர்முஸ் நீரிணையில் சிக்கித் தவித்த ஏழு கப்பல்களில் ஒன்று, அந்த நீரிணையைப் பாதுகாப்பாகக் கடந்து தற்போது மலேசியாவை நோக்கிப் பயணிப்பதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.

மேலும், அந்த முக்கிய வர்த்தக நீரிணையைக் கடந்து செல்வதற்கு, இன்னும் ஆறு கப்பல்கள் ஒப்புதலைப் பெற காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

''எனவே இன்னும் ஆறு (கப்பல்கள்) உள்ளன. இதனுடன் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான எண்ணெய் விநியோகம் இன்னும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளதாக நாங்கள் நம்புகிறோம்,'' என்று அவர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூரில் உள்ள ஒரு பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றிய பின்னர் பிரதமர் செய்தியாளர்களிடம் பேசினார்.

இவ்விவகாரம் குறித்து, பெட்ரோனாஸ் குழுமத்தின் தலைவரும், தலைமைச் செயல்முறை அதிகாரியுமான டான் ஸ்ரீ தெங்கு முஹமட் தௌபிக் தெங்கு அசிஸ் தமக்கு விளக்கமளித்ததாக அன்வார் குறிப்பிட்டார்.

உலகின் 20 விழுக்காடு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து ஹார்முஸ் நீரிணை வழியாக மேற்கொள்ளப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)