Ad Banner
Ad Banner
 உலகம்

ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகம் ஒரு 'புதிய கட்டத்தை' நோக்கி நகர்கிறது

10/04/2026 06:35 PM

தெஹ்ரான், 10 ஏப்ரல் (பெர்னாமா) -- ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகம் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைவதாக ஈரானின் உயர் மட்ட தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்திருக்கிறார்.

மேலும், அனைத்து போர் தொடர்பான இழப்புகளுக்கும் தெஹ்ரான் இழப்பீடு கோரும் என்றும் அவர் கூறினார்.

ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகம் புதிய வியூக கட்டத்தை நோக்கி நகரும் என்று கூறிய கமேனி அது தொடர்பான எந்த விவரங்களையும் வழங்கவில்லை.

ஈரான் போரை நாடவில்லை என்றாலும் அதன் உரிமைகளை எவ்விதத்திலும் விட்டுக்கொடுக்காது என்று அவர் தெரிவித்தார்.

சாத்தியமான உடன்படிக்கைகளை எட்டுவதைப் பேச்சுவார்த்தைகள் இலக்காகக் கொண்டிருப்பதாக அவர் விளக்கினார்.

மாறாக, அவை மோதல் முடிந்துவிட்டதற்கான அர்த்தமல்ல என்று கமேனி வலியுறுத்தினார்.

இந்நிலையில்,  எந்தவொரு புதிய ஆக்கிரமிப்புக்கும் ஈரான் பதிலடி கொடுக்க தயாராக உள்ளது என்றும் கமேனி எச்சரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)