Ad Banner
Ad Banner
 பொது

சந்தை விலையில் எண்ணெய் வாங்கும் பெருநிறுவனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் அரசாங்கம் எச்சரிக்கை

10/04/2026 06:17 PM

கோலாலம்பூர், 10 ஏப்ரல் (பெர்னாமா) -- சந்தை விலையில் இரகசியமாக எண்ணெயை வாங்கும் எந்தவொரு பெருநிறுவனங்கள் மற்றும் தொழில்துறையினர் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது.

அவர்கள் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து நேரடியாகச் சந்தை விலையான லிட்டருக்கு 7 முதல் 8 ரிங்கிட் வரை வாங்க வேண்டிய நிலையில் இருந்தாலும், தற்போது லிட்டருக்கு 6 ரிங்கிட் 72 சென் என்ற பெட்ரோல் நிலைய விலையில் வாங்குகின்றனர்.

அவ்விலையில், ஒரு பகுதி செலவை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதை இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான் சுட்டிக்காட்டினார்.

''இந்த நிறுவனங்கள் அத்தகைய மாற்று நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் அல்லது ஒழுங்குமுறை நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று அரசாங்கம் எச்சரிக்கிறது,'' என்று அவர் கூறினார்.

இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்த விளக்கமளிப்பில் அமிர் ஹம்சா அவ்வாறு கூறினார்.

உள்நாட்டு விநியோகத்தை உறுதி செய்வதற்காக நடவடிக்கைகளைக் கண்காணிப்பது மட்டுமின்றி, கடத்தல் மற்றும் மோசடியை துடைத்தொழிப்பதற்கான அமலாக்க முயற்சிகளையும் அரசாங்கம் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)