| BREAKING NEWS | LUBNAN RUGI SEHINGGA US$160 JUTA SEHARI AKIBAT KONFLIK - PERSATUAN EKONOMI | |
ஹோர்சன்ஸ், 25 ஏப்ரல் (பெர்னாமா) -- தோமஸ் கிண்ணப் பூப்பந்து போட்டி.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில், உபசரணை நாடான டென்மார்க், 4-1 என்ற புள்ளிகளில் தென் கொரியாவை வீழ்த்தியது.
ஹோர்சனில் நடைபெற்ற இப்போட்டியில், 2016-ஆம் ஆண்டின் வெற்றியாளரான டென்மார்க், C குழுவின் முதல் ஆட்டத்தில் தென் கொரியாவை சந்தித்தது.
முதல் சுற்றில் டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆன்டன்சென் 11-21, 21-17-, 21-15 என்ற புள்ளிகளில் தென் கொரியாவின் யூ டே-பின் தோற்கடித்தார்.
அதன் இரண்டாம் சுற்றில், டென்மார்க்கின் இணையினரான டேனியல் லண்ட்கார்ட் & மேட்ஸ் வெஸ்டர்கார்ட், தென் கொரியாவின் கி டோங்-ஜு & கிம் வோன்-ஹோ இணையினரை 21-18, 23-21 என்ற நேரடி செட்களில் வெற்றிக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, 21-12, 17-21, 21-15 என்ற புள்ளிகளில் டென்மார்க் ஆட்டக்காரரான மேக்னஸ் ஜோஹன்னெசெனும், தம்மை எதிர்த்து போட்டியிட்ட தென் கொரியாவின் சோய் ஜி-ஹூனை வீழ்த்தினார்.
இதனிடையே, ஊபர் கிண்ணப் பூப்பந்தாட்டத்தின் D குழுவில், 3-2 என்ற புள்ளிகளில் தாய்லாந்தின் மகளிர் அணி பல்கேரியாவை வீழ்த்தியது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]