Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

இந்தியாவுக்கு உதவிய பாகிஸ்தான்

06/05/2026 05:53 PM

அரபிக்கடல், 06 மே (பெர்னாமா) -- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அரபிக்கடலில் சிக்கியிருந்த இந்தியக் கப்பலுக்குப் பாகிஸ்தான் உதவியிருக்கிறது.

அக்கப்பலிலிருந்து கிடைத்த அவசர அழைப்பிற்குப் பிறகு, பாகிஸ்தான் கடற்படை அந்த உதவியை வழங்கியதாகப் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்தது.

எம்.வி. கௌதம் எனப் பெயரிடப்பட்ட அந்தக் கப்பலில், இந்தியாவைச் சேர்ந்த அறுவர் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த எழுவர் பயணித்தனர்.

ஓமானிலிருந்து இந்தியாவுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அக்கப்பல் கடலில் தத்தளித்ததாகப் பாகிஸ்தான் இராணுவம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கப்பலில் பயணித்த குழுவினரின் பாதுகாப்பை உறுதி செய்ய, காஷ்மீர் என்ற கப்பலை அனுப்பி உணவு, மருத்துவ உதவி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)