Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

மாநிலத் தேர்தல்களில் மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது பா.ஜ.க

05/05/2026 05:49 PM

புது டெல்லி, 05 மே (பெர்னாமா) -- இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி, பாஜக முக்கிய மாநிலத் தேர்தல்களில் மகத்தான வெற்றிகளைப் பெற்று, நாடு முழுவதும் தனது செல்வாக்கை விரிவுபடுத்தியுள்ளது. 

அசாமில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் வேளையில், மேற்கு வங்கத்தில் தாமரை மலர்ந்துள்ளதாக மோடி கூறியுள்ளார். 

நேற்று நடைபெற்ற தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு முக்கிய மாநிலத் தேர்தல்கள் முடிவில், நரேந்திர மோடியின் பாஜக இரண்டில் தனது வெற்றியை நிரூபித்துள்ளது. 

மேற்கு வங்க முதலமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி, போட்டியிட்ட பபானிபூர் தொகுதியில் தோல்வி கண்டார். 

இதன் மூலம் மோடி மற்றும் அவரது கூட்டணிக் கட்சிகள், இந்தியாவின் 28 மாநிலங்களில் 20-தையும், மத்திய அரசு நேரடியாக நிர்வகிக்கும் 3 பிரதேசங்களில் இரண்டையும் கட்டுப்பாட்டில் வைக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. 

இதனால், பாஜகவின் முக்கிய கொள்கைகள் வேகமடையும் என ஆய்வாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே,  தெற்கு மாநிலமான கேரளாவில், ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியைத் தோற்கடித்து, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கை வென்றிருக்கிறது. 
 
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)