Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

ரோஹிங்கியா சமூகத்தினரின் பள்ளி; கல்வி அமைச்சு விசாரிக்கும்

12/06/2026 04:54 PM

ஈப்போ, 12 ஜூன் (பெர்னாமா) -- கல்விச் சட்டத்தின் விதிகளுக்கு உட்படுவது மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட அமலாக்கத் தரப்பின் ஒப்புதல் இல்லாமல் இந்நாட்டில் எந்தவொரு பள்ளியும் செயல்பட முடியாது.

கோலா திரெங்கானு, கம்போங் லாடாங் தித்தியான் பகுதியில் ரோஹிங்கியா சமூகத்தினரால் பள்ளி ஒன்று நிறுவப்பட்டது தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்கான உரிய நடவடிக்கையை எடுப்பதற்கு முன்னர், அமைச்சு அது குறித்த விசாரணையை மேற்கொள்ளும் என்று, கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார். 

கல்வி தொடர்பான விதிமுறைகள் மற்றும் சட்டங்கள் பின்பற்றப்படுவதை கல்வி அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாக வோங் கூறினார். 

கல்வியை வழங்கும் ஒவ்வொரு கல்விக் கழகமும், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார். 

''திரெங்கானுவில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம். கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்போம்,'' என்றார் அவர். 

கோலா திரெங்கானு, கம்போங் லாடாங் தித்தியான் பகுதியில், ரோஹிங்கியா சமூகத்திற்காக இயங்கி வருவதாக நம்பப்படும் பள்ளி ஒன்று தொடர்பில் நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து அப்பகுதி மக்களிடையே இவ்விவகாரம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]