Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

அமெரிக்கா - ஈரான்: இடைக்கால ஒப்பந்தம் குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன

17/06/2026 01:22 PM

பிரான்ஸ், 17 ஜூன் (பெர்னாமா) -- மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இடைக்கால ஒப்பந்தம் குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன. 

கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி ஏற்றுமதி மீட்சிபெற வாரங்கள் ஆகலாம் என்றும் எச்சரிக்கப்பட்ட நிலையில், ஒப்பந்தத்தின் உரை விரைவில் வெளியிடப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளது குறித்து அவரிடம் விளக்கம் பெறப்பட்டது.

"நிருபர்: ஆவணத்தின் உரை மீது இவ்வளவு ஆர்வம் இருக்கிறதே... ஏன் அதை வெளியிடக்கூடாது?
டிரம்ப்: நான் வெளியொடுவேன்
நிருபர்: ஏன் வெளியிடக்கூடாது?
டிரம்ப்: ஏனென்றால், அதைச் செய்வதற்கு முன்பு நான் முதலில் ஒரு முறையான ஏற்பாட்டைப் பெற விரும்புகிறேன். ஆனால், அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அது ஒரு நல்ல ஆவணம். அதில் சொல்லப்பட்டிருப்பது இதுதான்: ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைக் கொண்டிருக்காது. அதுதான் அதில் கூறப்பட்டுள்ளது. அதை வாங்குவதற்கோ, உருவாக்குவதற்கோ அவர்களிடம் ஒன்று இருக்காது. அவர்களிடம் அணு ஆயுதம் இருக்காது. நான் விரும்பியதில் இது சுமார் 99.9% என்று சொல்வேன்,'' என்றார் அவர்.

இந்த இடைக்கால ஒப்பந்தம், ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையற்ற போர் நிறுத்தத்தை மேலும் 60 நாள்களுக்கு நீட்டிப்பதோடு, பிப்ரவரியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து ஈரான் தடுத்து வைத்துள்ள ஹோர்முஸ் நீரிணையையும் மீண்டும் திறக்க வழிவகுக்கும்.

ஒப்பந்தத்தின் வாசகத்தில் தெஹ்ரான் அணு ஆயுதம் வைத்திருக்காது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாகவும், முழுமையான ஒப்பந்த உரை இன்னும் சில நாள்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் டிரம்ப் கூறினார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]