Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

தென் கொரிய முன்னாள் அதிபருக்கு 30 ஆண்டுகள் சிறை!

12/06/2026 05:11 PM

சியோல், 12 ஜூன் (பெர்னாமா) -- 2024-ஆம் ஆண்டு இராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்படும் என்று கூறி, வட கொரியாவிற்கு ஆளில்லா விமானங்களை அனுப்ப உத்தரவு பிறப்பித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் யோலுக்கு இன்று 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

நாடு போரை எதிர்கொள்ளவது போன்ற சூழலை உருவாக்கிய யூனின் நடவடிக்கைகள் தேசியப் பாதுகாப்பிற்கு ஊறு விளைவித்ததாக, அரசு தரப்பின் சிறப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். 

இராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தியது மூலம் நாடாளுமன்ற முடக்கத்திற்கு வழிவகுத்த கிளர்ச்சியை தூண்டியதாக, யூனுக்கு கடந்த பிப்ரவரியில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆளில்லா விமான செயல்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக யூனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

எனினும், அது குறித்த எந்தவொரு விவரத்தையும் அவர் வழங்கவில்லை.

இந்நிலையில், யூன் அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததுடன், தேசிய நலனுக்காகவே இராணுவச் சட்டப் பிரகடனம்  செய்யப்பட்டதாக வாதிட்டுள்ளார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]