சுங்கை பட்டாணி, 16 ஜூன் (பெர்னாமா) -- இன்று காலை, கெடா, குருன் ஹொபார்ட் இராணுவ முகாமில், கையெறி குண்டு வீசும் பயிற்சியின்போது வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததை மலேசிய தரைப் படை உறுதிப்படுத்தியுள்ளது.
காலை மணி 10.57 அளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், இருவர் காயமடைந்தனர்.
சுங்கை பட்டாணி, சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில், அவ்விருவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
அரச மலாய் படைப்பிரிவு, ஆறாவது பட்டாலியனைச் சேர்ந்த கார்பரல் நோராஸ்மி அபு பாகார் மற்றும் அரச பொறியியல் படைப்பிரிவு, முதல் ஸ்குவாட்ரனைச் சேர்ந்த கீழ் நிலை இராணுவ அதிகாரி சித்தி கதீஜா சுங்கிப் ஆகியோர் அச்சம்பவத்தில் உயிரிழந்ததாக இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனைக்காக, அவ்விருவரின் சடலம் அலோர் ஸ்டார் சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இச்சம்பவத்திற்கான உண்மை காரணத்தைக் கண்டறிய விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தரைப்படை இராணுவத் தளபதி டான் ஶ்ரீ அஸ்ஹான் முஹமட் ஒத்மான் உத்தரவிட்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)