உலகம்

தொடர் மழையினால் மச்சு பிச்சுவில் மண் சரிவு

27/02/2024 07:32 PM

மச்சு பிச்சு, 27 பிப்ரவரி (பெர்னாமா) -- கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் மழையைத் தொடர்ந்து பெருவின் மச்சு பிச்சு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவரைக் காணவில்லை என்றும் 17 பேர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மண் சரிவினால் தரை போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

சாலையில் உள்ள மண் மற்றும் சகதிகளை அப்புறப்படுத்தக் குறைந்தது இரண்டு நாட்கள் ஆகும் என்று மதிப்பிடுகிறது.

தென்னமெரிக்க நாடான பெருவில் அமைந்துள்ள மச்சு பிச்சு உலகின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)