உலகம்

வங்காளதேசத்தில் ஆர்ப்பாட்டம்; கைது எண்ணிக்கை 168-ஆக உயர்வு

23/07/2024 06:35 PM

டாக்கா, 23 ஜூலை (பெர்னாமா) -- வங்காளதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களினால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,200-ஐ கடந்துள்ளது.

போலீஸ் உறுப்பினர் உட்பட 168 பேர் உயிரிழந்துள்ளனர்.

கலவரத்தினால் ஏற்படும் சீர்திருத்தங்களை விரும்பவில்லை என்பதால், போராட்டங்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு நிறுத்தப்படும் என்று மாணவர் குழு அறிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு கருதி இராணுவ வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.

அதே வேளையில், கடந்த வியாழக்கிழமை தொடங்கி நாடு தழுவிய நிலையில் இணையச் சேவை முடக்கம் கண்டிருப்பதால், தகவல் பரிமாற்றம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பொது சேவைத் துறைக்கான வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டில் ஐந்து விழுக்காடு சுதந்திர போரில் உயிரிழந்த முன்னாள் இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படலாம் என்று வங்காளதேசத்தின் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

பொது சேவைத் துறைக்கான வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டு முறையினால், கடந்த ஜூலை முதலாம் தேதி தொடங்கி ஆயிரக்கணக்கான மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த ஒதுக்கீட்டு முறையை நீதிமன்றம் இரத்து செய்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)