உலகம்

பிலிப்பைன்ஸ்; வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 33 பேர் பலி

26/07/2024 05:50 PM

மணிலா, 26 ஜூலை (பெர்னாமா) --  பிலிப்பைன்சில் கெமி புயல் மற்றும் தென்மேற்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33-ஆக உயர்ந்துள்ளது.

மணிலாவில் 11 பேர் பலியாகிய வேளையில், கலாபர்சன் மாவட்டத்தில் 12 பேர் மரணமடைந்திருப்பதாக போலீஸ் கூறியது.

கடுமையான புயல் காற்றால், பாதான் கடல் பகுதியில் பயணித்த எண்ணெய் கப்பல் ஒன்றும் மூழ்கியது.

நீரில் மூழ்கி, நிலச்சரிவு மற்றும் மின்சாரம் தாக்கிய காரணங்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாண்டு மட்டுமே, பிலிப்பைன்சை மூன்றாவது முறையாகப் புயல் தாக்கியுள்ளது.

இதனால் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

2013-ஆம் ஆண்டு வீசிய புயலினால், பிலிப்பைன்சில் 7,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)