உலகம்

பிரேசிலில் வெள்ளம் & நிலச்சரிவு; இதுவரை 23 பேர் பலி

25/03/2024 07:18 PM

ரியோ டி ஜெனிரோ, 25 மார்ச் (பெர்னாமா) -- பிரேசிலின் தென்கிழக்கு பகுதிகள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கே மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரியோ டி ஜெனிரோ மற்றும் எஸ்பிரிட்டோ சண்ட்டோ மாநிலங்களில் இதுவரை 23 மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஸ்பிரிட்டோ சண்ட்டோ மாநிலத்தில் மட்டும் 15 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

கடந்த 48 மணி நேரத்தில்,ரியோ டி ஜெனிரோவில் 321 மில்லி மீட்டர் மழைப் பொழிவு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது மார்ச் மாதம் முழுவதும் கணிக்கப்பட்ட மழைப் பொழிவுக்கு சமமாகும்.

புதன்கிழமை வரை கன மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டிருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]