உலகம்

மலாவியில் 23 மாவட்டங்கள் பேரழிவு மண்டலமாக அறிவிக்கப்பட்டன

25/03/2024 07:25 PM

நெனோ, 25 மார்ச் (பெர்னாமா) -- எல் நினோ பருவநிலையால் வறட்சி நிலவி வருவதால் மலாவி நாட்டில் 28 மாவட்டங்களில் 23 மாவட்டங்கள் பேரழிவு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் முதற்கட்ட மதிப்பீட்டில் அந்நாட்டின் சோளப் பயிர்களில் 44 விழுக்காடு அழிந்துள்ளதால் 20 லட்சம் குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன.

இரண்டு கோடி மக்கள் வசிக்கும் அந்நாட்டிற்கு சுமார் ஆறு லட்சம் மெட்ரிக் டன் உணவு  தேவைப்படுவதாக மலாவி  அதிபர் லசாருஸ் சக்வெரா தெரிவித்திருக்கிறார்.

வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவ அவர் அனைத்துலக சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அண்மைய காலமான கடுமையான வானிலை காரணத்தால் மலாவி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

பேரிடர் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 23 மாவட்டங்களில், 13 மாவட்டங்கள்  2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஃபிரெடி (Freddy( புயலால் பாதிக்கப்பட்டன.

உலகின் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகள் பருவநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை எதிர்நோக்குகின்றன.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]