உலகம்

தென்மேற்கு ஜப்பானில் நிலநடுக்கம்; எண்மர் காயம்

18/04/2024 06:57 PM

தோக்கியோ, 18 ஏப்ரல் (பெர்னாமா) -- தென்மேற்கு ஜப்பானில் இன்று நிகழ்ந்த 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது எண்மர் காயமடைந்தனர்.

இருப்பினும், இந்நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

நிலநடுக்கத்தினால் பெரிய அளவிலான சேதங்களும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.

அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி, இரவு 11.14 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்களைக் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்க பேச்சாளர் யொஷிமசா ஹயாஷி தெரிவித்தார்.

ஒய்தா மாவட்டத்தில் உள்ள முதியவர் இருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.

நிலநடுக்கம் காரணமாக சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

ஜப்பானில் ஆண்டுக்கு  சுமார் 1,500 நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்படும்/

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)