விளையாட்டு

ஸ்பெயின் மெட்ரிட் பொது டென்னிஸ் கிண்ணத்தை கைப்பற்றினார் ருப்லெவ்

06/05/2024 05:33 PM

ஸ்பெயின், 06 மே (பெர்னாமா) -- ஸ்பெயின் மெட்ரிட் பொது டென்னிஸ் போட்டியின் கிண்ணத்தை ரஷ்யாவின் எண்ரி ருப்லேவ் கைப்பற்றினார். 

கனடாவின் ஃபெலிக்ஸ் ஓகரை கடும் சவாலுக்குப் பின்னர் வீழ்த்தி ருப்லெவ் முதன் முறையாக மெட்ரிட் கிண்ணத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார். 

கடந்த வாரம் முழுவதும் எண்ரி ருப்லேவ் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். 

ஆயினும், காய்ச்சலுடன் தூக்கமில்லாத இரவுகளைக் கடந்து 26 வயதுடய அவர் இறுதியில் வெற்றி பெற்றிருக்கின்றார். 

அரையிறுதியில், டைலர் ஃபிரிட்சை தோற்கடித்து இறுதி ஆட்டத்தில் கால் வைத்த ருப்லெவ் இந்த இறுதி ஆட்டத்தில் ஃபெலிக்ஸ் ஓகர் உடன் மோதினார். 

அதில், 4-6, 7-5 மற்றும் 7-5 என்ற நிலையில் வாகை சூடி அவர் தமது இரண்டாவது மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். 

கடந்தாண்டு, மொன்ட்டே கார்லோ போட்டியில் வெற்றி பெற்ற ருப்லெவ், அதன் பின்னர் நான்கு போட்டிகளில் தொடர்ந்து தோல்வியைத் தழுவினார். 

மீண்டும் ஸ்பெயின் போட்டியில் களமிறங்கிய அவர் இரண்டு மணி நேரம் 47 நிமிடங்களில் தமது வெற்றியை உறுதிசெய்து கிண்ணத்தை வென்றுள்ளார். 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]