பொது

பாசிர் மாஸ்சில் அதிக வெப்பம் பதிவு

06/05/2024 07:15 PM

கோலாலம்பூர், 06 மே (பெர்னாமா) -- மே 2-ஆம் தேதி தொடங்கி கடந்த ஐந்து நாள்களாக கிளந்தான் பாசிர் மாஸ்சில் அதிக வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து மூன்று நாள்களாக 37 முதல் 40 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவு செய்யப்பட்டால் இரண்டாம் கட்ட வெப்பமான வானிலை எச்சரிக்கை விடப்படும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையமான, மெட்மலேசியா தெரிவித்திருக்கிறது.

இன்று மாலை 4.20 மணி வரை, கிளந்தானின் கோத்தா பாரு, பாசிர் பூத்தே, கோல கிராய், தானா மெரா ஆகிய பகுதிகளில் முதற்கட்ட வெப்பம் பதிவு செய்யப்பட்டிருப்பதாக மெட்மலேசியா கூறியது.

திரெங்கானுவின் பெசுட்டிலும் செத்தியுவிலும், கெடாவின் பாடாங் தெராப் மற்றும் சபாவின் கோத்தா மருடியிலும் முதற்கட்ட வெப்பம் பதிவாகியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)