பொது

தீவிரவாதம் பரவுவதைத் தடுக்க போலீஸ் தொடர் நடவடிக்கை எடுக்கும்

09/07/2024 06:36 PM

கோலாலம்பூர், 9 ஜூலை (பெர்னாமா) -- ஜோகூரில் உள்ள உலு திராம் போலீஸ் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய, இந்நாட்டில் தீவிரவாதம் பரவுவதைத் தடுக்க போலீஸ் தொடர்ந்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்.

தீவிரவாத சிந்தணைகள் தடுக்கப்பட வேண்டும் என்பதோடு, நாட்டில் உள்ள மக்களிடையே பிற தரப்பினரை நம்ப மறுக்கும் செயல் மிகவும் ஆபத்தானது என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

மலேசியாவில் பயங்கரவாத குழுக்களிடையே ஏற்படும் புதிய வடிவிலான பயங்கரவாத அச்சுறுத்தலை முறியடிப்பதில் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து ஜெர்லூன் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அப்துல் கானி அஹ்மாட் எழுப்பிய கூடுதல் கேள்விக்கு சைஃபுடின் நசுத்தியோன் அவ்வாறு பதிலளித்தார்.

உலு திராம் போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில், இரவு 10 மணிக்குப் பிறகு போலீஸ் நிலையத்தின் நுழைவாயிலை மூட வேண்டும் என்ற உத்தரவும் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)