பொது

சுக்மா சரவாக்கின் தலைமை செயல்முறை அதிகாரியைச் சந்தித்தது பெர்னாமா

09/07/2024 07:42 PM

சரவாக், 9 ஜூலை (பெர்னாமா) -- கூச்சிங், விஸ்மா பாபாவில், 2024ஆம் ஆண்டு சுக்மாவிற்கான சரவாக்கின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஹீ சாங் கீயை, தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா மரியாதை நிமித்தமாகச் சந்தித்தது.

பெர்னாமாவின் ஊழியர் குழுவிற்கு அதன் தலைமை செயல்முறை அதிகாரி நூருல் அஃபிடா கமாலுடினும், தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜு துரை ராஜூவும் தலைமையேற்றனர்.

பெர்னாமா குழுவில், சரவாக் பணியகத் தலைவர் ஹம்டான் இஸ்மாயில், விளையாட்டு மற்றும் புகைப்பட பிரிவு, பெர்னாமா தொலைக்காட்சி குழுவினர் ஆகியோரும் இருந்தனர்.

வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும் சுக்மாவின் அண்மைய நிலவரங்கள் குறித்து கலந்துரையாட இச்சந்திப்பு நடத்தப்பட்டதாக நூருல் அஃபிடா கூறினார்.

2024ஆம் ஆண்டுக்கான சுக்மா போட்டி ஆகஸ்ட் 17 தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)