பொது

பாரம்பரிய சடங்குகளுடன் சுல்தான் இப்ராஹிம் 17ஆவது மாமன்னராக அரியணை அமர்ந்தார்

20/07/2024 05:50 PM

கோலாலம்பூர், 20 ஜூலை (பெர்னாமா) -- இன்று இஸ்தானா நெகாராவில் மலாய் ஆட்சியாளர்களின் முழுமையான மரபுகள் மற்றும் பாரம்பரிய சடங்குகளுடன் சுல்தான் இப்ராஹிம், நாட்டின் 17-வது மாட்சிமை தங்கிய மாமன்னராக அரியணை அமர்ந்தார்.

இந்த வரலாற்றுப்பூர்வ நிகழ்வு, மலேசியாவின் அரசியலமைப்பு மன்னராட்சி செயல்முறை மகத்துவத்தின் முத்தாய்ப்பாகவும் விளங்குகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அரியணை அமரும் சடங்கை முழுமைப்படுத்தும் விதமாக 17-வது மாட்சிமை தங்கிய மாமன்னராக சுல்தான் இப்ராஹிம் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

சுல்தான் இப்ராஹிம் தமது உறுதிமொழியை வாசித்து முடித்தவுடன், பேராக் மாநிலத்தின் அரச இசைக் குழுவினர், நோபாட் தபால் பாடலுக்கு நோபாட் இசைக்கருவியை வாசித்தனர்.

அதன் பின்னர், டவுலாட் துவாங்கு என்று மூன்று முறை முழக்கமிடப்பட்டு, நெகாராக்கூ பண் பாடப்பட்டதும் 21 முறை பீரங்கிகள் முழங்கின.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)