விளையாட்டு

பல புதுமைகளுடன் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி

23/07/2024 06:09 PM

பாரிஸ், 23 ஜூலை (பெர்னாமா) -- இன்னும் மூன்று நாட்களில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி தொடங்கவுள்ளது.

இம்முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டி பல புதுமைகளைக் கொண்டுள்ளதால், அதனைக் காண்பதற்கு மக்களுடன் இணைந்து தாமும் ஆர்வமுடன் இருப்பதாக அனைத்துலக ஒலிம்பிக் செயற்குழுத் தலைவர் தோமஸ் பாக் தெரிவித்திருக்கிறார்.

உலகின் மிகப் பெரிய விளையாட்டுப் போட்டியான ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா அரங்கில் ஏற்பாடு செய்யப்படாமல் முதல் முறையாக பொதுவில் நடைபெறவுள்ளது.

பாரிஸ்சில் உள்ள புகழ்பெற்ற Seine ஆற்றின் கரையில் 2024 ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா நடைபெறவுள்ளதால் தாம் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளதாக தோமஸ் பாக் கூறினார்.

மேலும், ஆண் விளையாட்டாளர்களும் பெண் விளையாட்டாளர்களும் சம எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் முதல் ஒலிம்பிக் போட்டி என்ற பெருமையை பாரிஸ் ஒலிம்பிக் போட்டி பெற்றுள்ளது.

ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில்,  உலக நாடுகளில் இருந்து சுமார் 10,500 விளையாட்டாளர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)