பொது

ஊராட்சித் துறை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள ஆய்வு

10/08/2024 06:55 PM

கம்பார், 10 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 1976ஆம் ஆண்டு ஊராட்சித் துறை சட்டம், சட்டம் 171-இல் கண்ட இடங்களில் குப்பைகளை வீசும் குற்றவாளிகளுக்கான தண்டனை தொடர்பான உட்பிரிவில் திருத்தம் மேற்கொள்ள வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு, கேபிகேடி-இன் ஆய்வு செய்து வருகிறது.

அபராதம் எந்தவொரு விளைவையும் ஏற்படுத்தாத பட்சத்தில், குற்றவாளிக்கு சமூக சேவையை தண்டனையாக விதிப்பதும் இதில் அடங்கும் என்று அதன் அமைச்சர் ஙா கோரி மிங் தெரிவித்தார்.

''குப்பைகள் வீசுபவர்கள் சமூக சேவை செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். வெப்ப நேரத்தில் சாலையைச் சுத்தம் செய்வதும் அடங்கும். குப்பைகளில் கண்ட இடங்களில் வீசுபவர்களை டிக் டோக், மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,'' என்றார் அவர்.

இன்று சனிக்கிழமை கம்பாரில் நடைபெற்ற வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் 'Program Sentuhan Kasih' நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் ஙா கோர் மிங் அவ்வாறு தெரிவித்தார்.

கண்ட இடங்களில் குப்பைகளை வீசிய குற்றவாளிகளுக்கு சமூக சேவையை தண்டனையாக விதித்ததால் பல நாடுகள் வளர்ச்சி அடைத்திருப்பதை கண்டறிந்த பிறகு அச்சட்டம் திருத்தம் செய்யப்படலாம் என்று அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)