உலகம்

பதவியை கைவிடும் ஃபுமியோ கிஷிடா

14/08/2024 06:36 PM

தோக்கியோ, 14 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, தமது கட்சி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

இதன் மூலம், கட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் புதிய தலைவர் அந்நாட்டின் பிரதமராகத் நியமிக்கப்படுவார்.

2021-ஆம் ஆண்டு நடைபெற்ற அக்கட்சியின் தேர்தலில் வெற்றி பெற்று கிஷிடா அந்நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரின் மூன்று ஆண்டுக் கால பதவிக்காலம் செப்டம்பர் மாதம் நிறைவடையவிருப்பதை முன்னிட்டு, மிதவாத ஜனநாயகக் கட்சியின்  உயர்மட்ட பதவிகளுக்காக  அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம் கட்சி மாற்றத்தை விரும்புவதைப் புலப்படுத்தும் என்று 67 வயதான கிஷிடா கூறுகிறார்.

மேலும், தேர்ந்தெடுக்கப்படும் புதிய தலைவருக்கு, தாம் முழு ஆதரவு அளிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)