உலகம்

ஆப்கானிஸ்தானில் தலிபான் மீண்டும் ஆட்சி அமைத்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவு

14/08/2024 06:50 PM

பக்ராம், 14 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஆப்கானிஸ்தானில் தலிபான் மீண்டும் ஆட்சி அமைத்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது.

ஆப்கானிஸ்தானைப் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வந்த அமெரிக்கா, அந்நாட்டை விட்டு வெளியேறியதுடன், தலிபான் ஆட்சியைக் கைப்பற்றியது.

அமெரிக்காவின் இராணுவத் தளம் செயல்பட்ட பக்ராம் எனும் இடத்தில் இன்று தலிபான் ஆட்சியின் மூன்று ஆண்டுகளுக்கான நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில், தலிபானின் முதலமைச்சர் அப்துல் காபிர் உரையாற்றினார்.

தலிபான் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து, அந்நாட்டில் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாகப் பெண்களின் கல்வியில் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவர்களின் சுதந்திரம் மற்றும் தனிமனித உரிமைகள் பறிக்கப்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)