உலகம்

ஆப்பிரிக்க கண்டத்தில் அதிகரித்து வரும் குரங்கம்மை நோய்

14/08/2024 06:53 PM

ஆப்பிரிக்கா, 14 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஆப்பிரிக்க கண்டத்தில் அதிகரித்து வரும் குரங்கம்மை நோய்ப் பரவலை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆப்பிரிக்க ஒன்றிய சுகாதார கண்காணிப்பு அமைப்பு, சி.டி.சி வலியுறுத்தியுள்ளது.

ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள பல நாடுகளில் குறிப்பாக காங்கோ ஜனநாயக குடியரசில் அந்நோய் வேகமாகப் பரவி வருவதாக அந்த அமைப்பு கவலை தெரிவித்திருக்கிறது.

2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆப்ரிக்க நாடுகளில் சுமார் 38,465 குரங்கம்மை நோய் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சி.டி.சி தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், இந்நோயினால் 1,456 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குரங்கம்மை நோய் மேலும் பரவாமல் தடுக்க போதிய நடவடிக்கைகள் உடனே மேற்கொள்ளப்பட வேண்டும் சி.டி.சி கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், நோய்ப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, ஆப்ரிக்க நாடுகளுக்கு போதிய நிதி உதவியும் வழங்கப்பட வேண்டும் என்று சி.டி.சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)