விளையாட்டு

பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் சபா விளையாட்டாளருக்கு ஐந்து லட்சம் ரிங்கிட் வெகுமதி

14/08/2024 07:12 PM

கோத்தா கினபாலு, 14 ஆகஸ்ட் (பெர்னாமா) -- சபாவை பிரதிநிதித்து பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் விளையாட்டாளருக்கு ஐந்து லட்சம் ரிங்கிட் வெகுமதி வழங்கப்படும்.

இம்முறை மலேசியாவை பிரநிதிநிதித்து சபாவின் மூன்று விளையாட்டாளர்கள் கலந்து கொள்ளவிருப்பதாக அம்மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் டத்தோ எல்ரோன் அங்கின் தெரிவித்தார்.

சபாவிலிருந்து செல்லும் ஜோனதன் நீளம் தாண்டும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வெல்ல வாய்ப்பு இருந்தாலும், நாட்டிற்கு முதல் தங்கப் பதக்கத்தை வெல்ல அவர் முயற்சிக்க வேண்டும் என்று எல்ரோன் கேட்டுக் கொண்டார்.

சபா விளையாட்டாளர்கள் போதிய பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதுவரை பாராலிம்பிக் போட்டியில் சபா விளையாட்டாளர்கள் தங்கம் வெல்லாத நிலையில், இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக எல்ரோன் குறிப்பிட்டார்.

2024 பாரிஸ் பாராலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 28-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)