உலகம்

பேடோங்டார்ன் ஷின்வத்ரா தாய்லாந்தின் புதிய பிரதமராகத் தேர்வு

16/08/2024 06:37 PM

பேங்காக், 16 ஆகஸ்ட் (பெர்னாமா) -- தாய்லாந்தின் 31-ஆவது பிரதமராக பொறுப்பேற்கும் வகையில், அந்நாட்டின் பியு தாய் கட்சியின் தலைவர் பேடோங்டார்ன் ஷின்வத்ரா நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளார்.

11 உறுப்புக் கட்சிகள் கொண்ட மிகப் பெரிய கூட்டணியின் தலைவராக இருக்கும் 37 வயதான பேடோங்டார்ன், முன்னாள் பிரதமர் தாக்‌ஷின் ஷினாவட்ராவின் இளைய மகள் ஆவார்.

தக்‌ஷின் உடன் ஜனரஞ்சக உறவைக் கொண்டிருக்கும் பியு தாய் கட்சி, பேடோங்டார்ன்-ஐ மட்டுமே பிரதமர் வேட்பாளராக நியமித்தது.

அரசியலில் புதிதாக களம் இறங்கியிருக்கும் பேடோங்டார்ன் 319 வாக்குகளைப் பெற்ற நிலையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் 145 வாக்குகளையும் பெற்றார்.

இதில் 27 பேர் வாக்களிக்கவில்லை.

பிரதமராக புதிய அரசாங்கத்தை அமைக்க தேவையான 247 வாக்குகளுக்கும் அதிகமாகவே பேடோங்டார்ன் பெற்றுள்ளார்.

பியு தாய்-இன் 11 கட்சிகளின் ஆதரவையும் பேடோங்டார்ன் பெற்றிருக்கின்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)