பொது

'CELIK MADANI: CELIK KEWANGAN BELIA MADANI' திட்டத்திற்கு ஆதரவளிக்க 5 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு

22/08/2024 06:53 PM

ஷா ஆலம், 22 ஆகஸ்ட் (பெர்னாமா) -- Permodalan Nasional Berhad, PNB கீழுள்ள 'Celik Madani: Celik Kewangan Belia Madani' திட்டத்திற்கு ஆதரவளிக்க பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் 5 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டை அறிவித்துள்ளார்.

இத்திட்டம் ஒவ்வோர் ஆண்டும், பொது உயர்கல்விக் கழகம் மற்றும் புதிய தொழில் திறன் கல்வி கழகத்தின் இரண்டு லட்சம் பங்கேற்பாளர்களை இலக்கு கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று, 2024ஆம் ஆண்டு 'Saham Amanah Malaysia' வார தொடக்க விழாவில் உரையாற்றும்போது நிதி அமைச்சருமான அன்வார் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)