பொது

நல்லாட்சியே நாட்டின் வரலாற்றில் மிக அதிகமான ஒதுக்கீட்டிற்கு வழிவகுத்தது - ரஃபிசி

20/10/2024 05:44 PM

புத்ராஜெயா, 20 அக்டோபர் (பெர்னாமா) -- நல்லாட்சி, விவேகமான நிதி நிர்வகிப்பு மற்றும் விரைவான தேசிய பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் நேர்மறை விளைவே, அடுத்தாண்டு வரவு செலவுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் 42,100 கோடி ரிங்கிட்டாகும் என்று பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி தெரிவித்துள்ளார்.

இதன்வழி, அரசாங்கம் அதிகமான செலவுகளை மேற்கொள்ள முடிந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட பொறுப்பான நிதி இலக்கு மற்றும் தேசிய கடனைத் தொடர்ந்து குறைப்பதற்கான உறுதி இன்னும் உள்ளதை, அவர் சுட்டிக்காட்டினார்.

''இவ்வாண்டு நிதியைப் பொருத்தவரை, புதிய கடனைக் குறைக்க வேண்டும். இதன் மூலம் 2028-ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 விழுக்காட்டு கடனை செலுத்தியிருப்போம். எனவே 2025 வரவு செலவுத் திட்டம், இந்தத் திட்டங்களை நிறைவேற்றுகிறது. அதோடு, மக்களின் செலவினங்களைக் குறைக்காத வழித்தடத்தில் நாங்கள் செல்கிறோம்,'' என்றார் அவர்.

இன்று, புத்ராஜெயாவில், 2024ஆம் ஆண்டு தேசிய புள்ளிவிவர தினத்தை தொடக்கி வைத்தப் பின்னர் ரஃபிசி செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.

பொருளாதார உச்சவரம்பு மற்றும் மக்களின் வருமானத்தை உயர்த்தும் மடானி பொருளாதாரத்திற்கு ஏற்ப, 2025 வரவு செலவு ஒதுக்கீட்டில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)