பொது

போலி தங்கத்தை விற்கும் வாங்கும் விவகாரத்தில் ஏமாற்றியதாக ஆடவர்கள் மீது குற்றப்பதிவு

04/09/2024 06:15 PM

பட்டர்வெர்த், 04 செப்டம்பர் (பெர்னாமா) -- 32,000 ரிங்கிட் இழப்பை உட்படுத்தி போலி தங்கத்தை விற்கும் வாங்கும் விவகாரத்தில் தனிநபர் ஒருவரை ஏமாற்றியதாக, இரு ஆடவர்கள் இன்று பினாங்கு, பட்டர்வெர்த் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

எனினும், சுயமான சுவிஸ் (Swiss) இரு தங்கக் கட்டிகள் என்று 64 வயதுடைய ஆடவரை நம்ப வைத்து ஏமாற்றியதாகச் சுமதப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை அவ்விருவரும் மறுத்தனர்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 420-இன் கீழ் 33 வயதுடைய தே யொங் யாங் மற்றும் 42 வயதுடைய ஊய் கார் ஹொன் ஆகிய இருவரின் மீதும் குற்றம் பதிவாகியது.

இருவரையும் தலா 14,000 ரிங்கிட் ஜாமின் மற்றும் தனிநபர் ஒருவரின் உத்தரவாதத்தில் மஜிஸ்திரேட் சித்தி சுலைக்கா நோர்டின் @ கானி விடுவித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]

 KEYWORDS
 தொடர்புடைய செய்திகள்
 பரிந்துரை