பொது

எளிய மற்றும் விரிவான அம்சங்களுடன் 13-வது மலேசியத் திட்டம்

05/09/2024 06:59 PM

சிப்பாங், 05 செப்டம்பர் (பெர்னாமா) -- ஆர்.எம்.கே.13 எனப்படும் 13-வது மலேசியத் திட்டம், கிட்டத்தட்ட ஆர்.எம்.கே.1-ஐ போல சமமாக இருக்கும்.

எளிய மற்றும் விரிவான அம்சங்களுடன், வியூக ஆவணமாக அறியப்பட்ட அத்திட்டத்தின் ஒவ்வோர் அம்சமும் ஒரு குறிப்பிட்ட கொள்கை திசையில் உறுதியாக இருந்ததாக, பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க மாற்றம், பன்முகத்தன்மையின் மையமாக இருப்பதால், ஐந்தாண்டு திட்டத்தை உருவாக்குவது என்பது ஒரு சிக்கலான பணி என்றும் அவர் எடுத்துரைத்தார்.

இன்று, சிப்பாங்கில், ஆர்.எம்.கே.13-இன் தொடக்க மாநாட்டில் உரையாற்றிய ரஃபிசி முன்னுரிமைகளைத் திட்டமிட்டு ஆய்வு செய்ய அரசாங்கம் முயற்சிப்பதோடு, நாட்டின் எதிர்காலத்திற்கான சரியான கொள்கைகளையும் வரிசைப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)