பொது

புதிய உத்தியில் தொலைப்பேசி அழைப்பு மோசடி

06/09/2024 07:50 PM

கோலாலம்பூர், 06 செப்டம்பர் (பெர்னாமா) -- தொலைப்பேசி அழைப்பு மோசடி கும்பல் தற்போது மின்னியல் வர்த்தக தளத்தின் ஊழியர்களைப் போல் வேடமிடுவது, புதிய உத்தி முறையாக கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஜனவரி தொடங்கி, அம்மோசடி தந்திரத்தைப் பயன்படுத்தி சுமார் 40 லட்சம் ரிங்கிட் இழப்பீட்டை உள்ளடக்கிய 125 வழக்குகள் பதிவாகியுள்ளதை புக்கிட் அமான், வணிக குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ ரம்லி முஹமட் யூசோப் சுட்டிக்காட்டினார்.

''இந்த மோசடி கும்பல்கள் பயன்படுத்தும் தந்திரங்கள் எப்பொழுதும் மாறிக் கொண்டே இருக்கும். புதிதாக, மின்னியல் வர்த்தக தளத்தின் ஊழியர்களைப் போல் வேடமிட்டு செய்வது தொலைப்பேசி மோசடி கும்பல் பயன்படுத்தும் புதிய உத்தியாக கண்டறியப்பட்டுள்ளது,'' என்றார் அவர்.

2022-ஆம் ஆண்டு தொடங்கி, போலீஸ் அதிகாரிகளைப் போல், வேடமிட்டு செய்யும் வழக்குகள் உட்பட அதிகபடியான இழப்புகள் இன்னும் பதிவு செய்து வருவதாக, அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)