பொது

கசிவு & ஊழல் ஏற்படாவிடில் டோல் கட்டணம் குறையலாம்

08/09/2024 07:39 PM

சிரம்பான், 08 செப்டம்பர் (பெர்னாமா) -- நாட்டின் நெடுஞ்சாலை மேம்பாட்டுச் செலவுகள் கட்டுப்படுத்தப்படுவதுடன், அவற்றில் கசிவு மற்றும் ஊழல் ஏற்படாமல் இருந்தால், டோல் கட்டணம் குறைக்கப்படலாம் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கான அனுமதிகளுக்கு, அதிகம் செலவிடப்படுவதால் அதன் மேம்பாட்டுச் செலவுகளும் அதிகரித்துள்ளதாகப் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

எனவே, மேம்பாட்டுத் திட்டச் செலவுகளைக் கட்டுப்படுத்தவும், அனைத்து விதமான கசிவைத் தவிர்க்கவும் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார். 

''செலவு. நெடுஞ்சாலையின் மேம்பாட்டை ஆய்வு செய்யும்போது அதனால் கசிவு ஏற்படாது. ஏனெனில் செலவு அதிகரிக்கும்போது டோல் கட்டணமும் அதிகரிக்கிறது. செலவைக் கட்டுப்படுத்தினால் கசிவு மற்றும் ஊழல் இல்லை. இயற்கையின் இயல்பான விதியான கட்டண விகிதத்தை நாம் குறைக்கும் வாய்ப்பு உள்ளது,'' என்று அவர் கூறினார்.

நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் நேர்மைக்கு முன்னுரிமை அளித்து மக்கள் நலன் காத்துச் செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். 

இதனிடையே, நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான உருமாற்றத்தின் தொடக்கமாக, தெற்கு நோக்கிச் செல்லும் சிரம்பான் ஓய்வு தளம், R&R பகுதி அமைய வேண்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

மடானி அரசாங்கத்தின் அணுகுமுறையில் இத்திட்டம் பெரிய மாற்றத்தைப் பிரதிபலிப்பதோடு, இது தற்போது மக்களின் வசதியையும் சுற்றுச்சூழலின் நிலைத்தன்மையையும் வலியுறுத்துவதாக அவர் கூறுகிறார்.

''ஒரு நகரத்திற்கு ஓர் அடையாளம். கோலாலம்பூரில் இரட்டை கோபுரம், தங்கும் விடுதிகள் மிகவும் அழகாக உள்ளன. அது முக்கியம் என்றுதான் நான் சொல்கிறேன். எனினும், சிறு உணவுக் கடைகள் எப்படி? ஏனெனில், இதுபோன்ற சிறு ரக உணவுக் கடைகளுக்கே அதிகமான மக்கள் அதாவது 80 விழுக்காட்டு மக்கள் செல்கிறார்கள். பெரிய வகை உணவகங்களுக்கும் தங்கும் விடுதி உணவகங்களுக்கும் 20 விழுக்காட்டினர் மட்டுமே செல்கின்றனர்,'' என்று அவர் கூறினார்,

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின், தெற்கு நோக்கிய சிரம்பான் ஓய்வு தளம், R&R-ரை திறந்து வைத்தபோதும், அன்வார் செய்தியாளர்களிடம் பேசினார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)