பொது

ஹலால் சான்றிதழுக்கான பரிந்துரைகளை கூட்டத்தில் தெரிவிப்பீர் - அன்வார்

08/09/2024 07:42 PM

சிரம்பான், 08 செப்டம்பர் (பெர்னாமா) -- ஹலால் சான்றிதழ் தொடர்பில் அக்கறை கொண்டிருக்கும் தரப்பினர்கள், அது குறித்த பரிந்துரைகளை, கூட்டங்களில் துல்லியமாகக் கலந்தாய்வு மேற்கொள்ளுமாறு  பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தினார்.  

அவை, மத, இன உணர்வுகள் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக மாற்றப்படக்கூடாது என்று, ஹலால் சான்றிதழ் குறித்து, தனிநபர் ஒருவர் வெளியிட்ட கூற்றுத் தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பிரதமர் அவ்வாறு பதிலளித்தார். 

வளர்ச்சி கண்டு வரும் பொருளாதாரத்துடன் மலேசியா தற்போது நிலையான சூழலில் உள்ளதை டத்தோ ஶ்ரீ அன்வார்  நினைவுறுத்தினார். 

எனவே, இது போன்ற உணர்வுப்பூர்வமான விவகாரங்கள் விவேகத்துடன் கையாளப்பட வேண்டும் என்றும், அது நாட்டின் நிலைத்தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)