பொது

பொது மருத்துவமனையில் பகடிவதை; முழு விசாரணை வேண்டும் - எம்.எம்.ஏ

13/09/2024 06:59 PM

கோலாலம்பூர், 13 செப்டம்பர் (பெர்னாமா) -- சபாவில் உள்ள அரசாங்க பொது மருத்துவமனையில், சில மருத்துவர்கள் பகடிவதைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதை தொடர்ந்து அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மலேசிய மருத்துவ சங்கம், எம்.எம்.ஏ வலியுறுத்தியிருக்கிறது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர்கள் வாய் மொழியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விசாரணையில் ஏற்படும் தாமதம் அம்மாநிலத்தில் உள்ள சுகாதார மையங்களின் சேவையைப் பாதிக்கும் என்று எம்.எம்.ஏ தலைவர் டத்தோ டாக்டர் கல்விண்டர் சிங் கைரா தெரிவித்தார்.

"இது தொடர்பாக எம்.எம்.ஏ உதவத் தயாராக உள்ளது. இச்சம்பவம் குறித்து முழு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். குற்றம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை, சுகாதாரத் துறையில் பகடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டும் என்று அவர் கூறினார்.

சபாவில் உள்ள ஒரு பொது மருத்துவமனையில் பகடிவதையால் பாதிக்கப்பட்டதாக சில மருத்துவர்கள் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து, சுகாதார அமைச்சு உடனடியாக விரிவான விசாரணையை மேற்கொள்ளும் என்று அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் அண்மையில் கூறியிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)