அரசியல்

மக்கோத்தா வேட்பாளர்கள் தங்களின் வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றினர்

28/09/2024 06:21 PM

குளுவாங், 28 செப்டம்பர் (பெர்னாமா) -- மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் இரு வேட்பாளர்களும், வாக்காளர்களாக தங்கள் கடமைகளை இன்று நிறைவேற்றினர்.

அவ்விருவரும், மக்கோத்தா சட்டமன்றத்தில் பதிவுப்பெற்ற வாக்காளர்கள் ஆவர்.

குளுவாங் தொகுதியின் அம்னோ இளைஞர் பிரிவு தலைவரும், தேசிய முன்னணி வேட்பாளருமான, சை ஹுசேன் சைட் அப்துல்லா இன்று காலை மணி 8.54 அளவில் ஶ்ரீ பெர்டானா இடைநிலைப் பள்ளியில் வாக்களித்தார்.

இதனிடையே, பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் முஹமட் ஹைசான் ஜாஃபார், காலை மணி 10 அளவில் கம்போங் மெலாயு தேசிய ஆரம்பப் பள்ளியில் வாக்களித்தார்.

மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான 20 வாக்களிப்பு மையங்களை உள்ளடக்கிய அனைத்து 109 வாக்குச்சாவடிகளும் இன்று காலை 8 மணிக்கு ஒரே நேரத்தில் திறக்கப்பட்டன.

61 ஆயிரத்து 274 வாக்காளர்களை உட்படுத்திய இன்றைய வாக்களிப்பு, மாலை மணி 6 வரையில் நடைபெற்றது.

இத்தொகுதியில் மொத்தம் 66 ஆயிரத்து 318 பதிவுப் பெற்ற வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முன்கூட்டியே வாக்களிப்பில், இராணுவ மற்றும் போலீஸ் உறுப்பினர்கள், அவர்களின் துணைவியர் உள்ளிட்ட 4 ஆயிரத்து 437 பேர் வாக்களித்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)