பொது

உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த அரசாங்கம் 30 கோடி ஒதுக்கீடு

18/10/2024 07:53 PM

கோலாலம்பூர், 18 அக்டோபர் (பெர்னாமா) -- உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, மாநில அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், விவசாயத் திட்டங்களுக்கு 30 கோடி ரிங்கிட்டை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

இந்தத் திட்டம், பேராக்கில் வெங்காய உற்பத்தி, பகாங்கில் சிவப்பு மீன் வளர்ப்பு மற்றும் நெகிரி செம்பிலானில் அரிசி விளைச்சலை அதிகரிப்பது போன்றவற்றை ஆதரிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

"அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, 8,800 ஏக்கர் தரிசு நிலத்தை, வட்டார வளர்ச்சி வாரியங்கள் மற்றும் அவற்றைச் சார்ந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான, வளர்ப்பு கோழி மற்றும் கால்நடை நிறுவன விவசாயத் திட்டங்களைச் செயல்படுத்தப் பயன்படுத்தும்." என்றார் அவர்

உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலையான விவசாயத்தை ஆதரிக்கும் விவசாய -உணவு தொழில்முனைவோருக்கு 20 கோடி கடன் வசதியும், விவசாயிகள் மற்றும் வளர்ப்பாளர்களுக்கு உற்பத்தியை அதிகரிக்க 27 கோடி ஊக்குவிப்புத் தொகையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, 8,800 ஏக்கர் தரிசு நிலத்தை, வட்டார வளர்ச்சி வாரியங்கள் மற்றும் அவற்றைச் சார்ந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான, வளர்ப்பு கோழி மற்றும் கால்நடை நிறுவன விவசாயத் திட்டங்களைச் செயல்படுத்தப் பயன்படுத்தும். 

இதற்கிடையில்,  விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு மொத்தம் 2.78 பில்லியன் ரிங்கிட் உதவி மானியங்கள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்படவுள்ளன.
 

-- பெர்னாமா