விளையாட்டு

ஆசிய வெற்றியாளர் லீக் கிண்ண போட்டி; மலேசியாவுக்கு இறங்கு முகம்

23/10/2024 07:04 PM

கோலாலம்பூர், 23 அக்டோபர் (பெர்னாமா) -- 2024/25 ஆசிய வெற்றியாளர் லீக் கிண்ண காற்பந்து போட்டியிலும் மலேசியாவுக்கு இறங்கு முகமானது.

இப்போட்டியில், முறியடிக்கப்படாத சாதனையைக் கொண்டிருந்த ஜோகூரின் JDT 1-3 என்ற கோல்களில் தென் கொரியாவின் Gwangju கிளப்பிடம் தோற்றது.

ஆட்டத்தை விறுவிறுப்பாக JDT தொடங்கினாலும், Gwangju கிளப் அதற்கு கடும் போட்டியைக் கொடுத்தது.

அதன் பலனாக, Gwangju ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்திலேயே அதன் முதல் கோலை எளிதாக போட்டது.

முதல் கோலின் வெற்றியைக் கொண்டாடி முடித்த அடுத்த மூன்று நிமிடங்களிலேயே, Gwangju அதன் இரண்டாம் கோலை அடித்து மகிழ்ச்சியில் திளைத்தது.

மலேசியாவின் ஒரே கோல், முதல் பாதி ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் ஜுவான் முனிஸ் வழி அடிக்கப்பட்டது.

இரண்டாம் பாதி ஆட்டத்தை JDT ஆக்கிரமித்த போதிலும், அதன் தற்காப்பு பகுதி பலவீனம் கொண்டிருந்ததால், சமயம் பார்த்து, Gwangju மூன்றாம் கோலை போடப்பட்டது.

இந்த வெற்றியின் வழி, Gwangju புள்ளிப்பட்டியலில் முதல் நிலை வகிக்கிறது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]