விளையாட்டு

உலக காற்பந்து தரவரிசையில் மலேசியா சரிவு

25/10/2024 07:12 PM

கோலாலம்பூர், 25 அக்டோபர் (பெர்னாமா) -- உலக காற்பந்து தரவரிசையில் மலேசியா சரிவு கண்டுள்ளது.

அனைத்துலக காற்பந்து சம்மேளனமான FIFA வெளியிட்ட புதிய தரவரிசையில், 132-வது இடத்தை வகித்த ஹரிமாவ் மாலாயா, தற்போது 133-வது இடத்தில் உள்ளது.

அண்மையில் நியூசிலாந்துடன் நடைபெற்ற ஆட்டத்தில், 4-0 என்ற கோல்களில் மலேசியா தோல்வி கண்டதால், தேசிய அணி நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மலேசிய காற்பந்து சங்கம், FAM தெரிவித்திருக்கிறது.

நவம்பர் மாதம், உலகின் 125-வது இடத்தில் உள்ள இந்தியாவுடன் மலேசியா மோதவுள்ள நிலையில், FIFA-வின் புதிய தரவரிசை, நவம்பர் 28-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று FAM குறிப்பிட்டது.

உலகத் தரவரிசையில் சரிவு கண்டுள்ளதால், 2027-ஆம் ஆண்டு ஆசிய காற்பந்து போட்டியில் மலேசியா சிக்கலை எதிர்நோக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)