விளையாட்டு

வியன்னா பொது டென்னிஸ்: கச்சனோவ் காலிறுதிக்குத் தேர்வு

25/10/2024 07:16 PM

வியன்னா, 25 அக்டோபர் (பெர்னாமா) -- ஆஸ்திரியாவில் நடைபெறும் வியன்னா பொது டென்னிஸ் போட்டி.

நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வெற்றி பெற்று, ரஷ்யாவின் கெரேன் கச்சனோவ் காலிறுதிக்குத் தேர்வாகினார்.

அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமாவுடன் கச்சனோவ் விளையாடினார்.

இவ்வாட்டத்தின் முதல் செட்டில் 1-6 என்ற புள்ளிகளில் கச்சனோவ் தோல்வி அடைந்தாலும், அடுத்த இரண்டு செட்களையும் 6-3, 6-4 என்று அவர் கைப்பற்றினார்.

காலிறுதி ஆட்டத்தில், உலகின் 24-வது தரவரிசையில் உள்ள கச்சனோவ், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினிவுடன் மோதவுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)