பொது

முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க மலேசியாவும் எத்தியோப்பியாவும் இணக்கம்

26/10/2024 05:55 PM

புத்ராஜெயா, 26 அக்டோபர் (பெர்னாமா) -- பல முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க, மலேசியாவும் எத்தியோப்பியாவும் இணக்கம் தெரிவித்துள்ளன.

ஆப்பிரிக்கா கண்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை, மலேசிய தொழில்துறையினரும் அடையாளம் காண ஊக்குவிக்கப்படுவதாக எத்தியோப்பிய பிரதமர் டாக்டர் அபிய் அஹ்மட் அலி தெரிவித்தார்.

மேலும், மலேசியாவில் உள்ள கூட்டரசு செயல்முறை, ஜனநாயகம் மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமானம் போன்ற நடைமுறைகளை கற்றுக் கொள்வதற்கான தமது எண்ணத்தையும் எத்தியோப்பியா வெளிப்படுத்தியது.

முன்னதாக, பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கும் டாக்டர் அபிய் அஹ்மட்டிற்கும் இடையே நடைபெற்ற 45 நிமிட சந்திப்பில், பரஸ்பர நலன் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)