விளையாட்டு

தொடர்ந்து அதிரடி படைக்கிறது எம்.யூ

03/12/2024 04:56 PM

லண்டன், 03 (பெர்னாமா) -- நிர்வாகி ரூபன் அமோரிமின் தலைமையில் தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்று மென்செஸ்டர் யுனைடெட் அதிரடி படைத்து வருகிறது.

ஆயினும், வரும் புதன்கிழமை, எமிரேட்ஸ் அரங்கில், பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள ஆர்செனலை எதிர்கொள்வதில், மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு பெரிய சவால் காத்திருக்கிறது.

கடந்த ஆட்டத்தில் எவர்ட்டன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாதியில் வெளியேற்றப்பட்ட எம்.யூ கேப்டன் புரூணோ ஃபெர்ணடோஸ் அர்செனலுக்கு எதிரான போட்டியில் களமிறங்கத் தயாராக இருப்பதாக  ரூபன் அமோரோம் உறுதிப்படுத்தினார்.

கூடுதலாக, லில் கிளப்பில் இருந்து யுனைடெட் வந்து சேர்ந்திருக்கும் 19 வயது இளம் ஆட்டக்காரர் லெனி யோரோவையும் அவர் பாராட்டினார்.

இங்கிலாந்து பிரிமியர் லீக் பட்டியலில், லிவர்பூல் முன்னிலை வகிக்கும் வேளையில், மென்செஸ்டர் யுனைடெட் இப்போது 15 புள்ளிகள் பின்தங்கி ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)