விளையாட்டு

மயங்கி விழுந்த போவ் சீரான நிலையில் உள்ளார்

03/12/2024 05:08 PM

ஃப்யோரிண்டினா, 03 (பெர்னாமா) -- இத்தாலி சிரி A கிண்ண காற்பந்து லீக்கில், இண்டர் மிலான் உடனான ஆட்டத்தின் போது மயங்கி விழுந்த, ஃப்யோரிண்டினா கிளப்பின் எடோராடோ போவ் தற்போது சீரான நிலையில் உள்ளார்.

22 வயதான போவ், ஆட்டத்தின் 16-வது நிமிடத்தில் மயங்கி விழுந்ததை அடுத்து, ஆட்டக்கார்கள் மற்றும் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியதால், போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

அவர் தற்போது ஃபோளரன்ஸ்சின் கேர்கி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சீராக இருப்பதை,  ஃப்யோரிண்டினா கிளப் உறுதிப்படுத்தியது.

அடுத்த 24 மணிநேரத்தில் போவ்வின் உடல்நிலை மறுமதிப்பீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது இன்னும் கோல் இல்லாமல் சமநிலையில் இருந்த அவ்வாட்டம், மற்றொரு நாளில் நடத்துவதற்கு மாற்றப்படும்.

இச்சம்பவம், ஃப்யோரிண்டினாவின் முன்னாள் கேப்டன் டேவிட் அஸ்தோரியின் சோகமான மரணத்தை ரசிகர்களுக்கு நினைவூட்டியது.

அவர், 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஆட்டத்தின்போது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)