லிமா, 12 நவம்பர் (பெர்னாமா) -- 2022-ஆம் ஆண்டில் பிரதமராக பதவியேற்றதில் இருந்து லத்தின் அமெரிக்காவிற்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டிருக்கும் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு, அரசாங்கத் தலைவருக்கு வழங்கும் ஒரு உயரிய மரியாதையாக பெருவின் உயரிய “EL SOL DEL PERU” பதக்கம் வழங்கி அங்கீகரிக்கப்படவிருக்கிறது.
அரசர், அரசாங்கத் தலைவர், வெளியுறவு அமைச்சர், அமைச்சர், அங்கீகரிக்கப்பட்ட தூதர் அல்லது பொது அமலாக்கத் தரப்பு அதிபர் போன்றோருக்கு கிராண்ட் கிராஸ் கிரேட்டுடன் பெரு குடியரசு வழங்கும் உயரிய அங்கீகாரம் 'El Sol del Perú' பதக்கமாகும்.
மலேசியாவிற்கும் பெருவிற்கும் இடையிலான இருவழி உறவை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் நவம்பர் 14 தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் 31-ஆவது APEC பொருளாதார தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்வதை உள்ளடக்கி சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வப் பயணம் அடங்கும் என்று பெருவிற்கான மலேசிய தூதர் அஹ்மட் இர்ஹாம் இக்மால் ஹிஷாம் தெரிவித்தார்.
நிதியமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் நவம்பர் 13-ஆம் தேதி பெருவைச் சென்றடைவார்.
''இந்தப் பயணத்தில், பெரு அரசாங்க அரண்மனையில் பிரதமர் பெரு அதிபர் டினா எர்சிலியா போலுயார்டே செகர்ராவை பிரதமர் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என்று அஹ்மட் இர்ஹாம் தெரிவித்தார்.
இன்று, பெரு, லிமாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)